1. துயரங்களில் துவளாதே.
2. அவமானங்களை அழுத்தித்துடை.
3. புகழ் வேண்டுமென்றால் அதை நினைக்காதே. பேய் மாதிரி உழைத்துக்கொண்டிரு.
4. வாழ்க்கையைக் காதலி. வந்துபோகும் காதல்ளால் பாதிப்படையாதே.
5. நீ இருக்கும் துறையில் நிலைத்திருக்க உன்னைத் தகுதியாக்கிக்கொள்.
6. ஊர் வாயை அடைக்க உன்னால் முடியாது. உன் வழியில் போய்க் கொண்டே இரு.
7. முடிந்த போது ஊருக்கு உதவி செய்.
8. மனித நேயம் வேண்டும். மக்கள் உன்னை நினைக்க அதுவே சரி.
9. புகழ் வரும் போது அதைக் கண்டு கொள்ளாதே. வேலையைப் பார்.
முடியாது என்பது மூடத்தனம்,முடியும் என்பது மூலதனம். கற்றுக் கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை செல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய். பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்.
Saturday, October 31, 2009
Tuesday, October 27, 2009
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்
மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
மிகக் கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
கீழ்த்தரமான விடயம் - பொறாமை
நம்பக் கூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
செய்யக் கூடியது - உதவி
விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
பிரியக் கூடாதது - நட்பு
மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
மிகக் கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
கீழ்த்தரமான விடயம் - பொறாமை
நம்பக் கூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
செய்யக் கூடியது - உதவி
விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
பிரியக் கூடாதது - நட்பு
மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக
Labels:
அம்சங்கள்
Saturday, August 22, 2009
Monday, August 3, 2009
Self Management

You are responsible for everything that happens in your life. Learn to accept total responsibility for yourself. If you do not manage yourself, then you are letting others have control of your Life. These tips will help "you" manage "you."
Here is a list of things that help you in self management and which will in turn lead you to the path of success: -
1.Look at every new opportunity as an exciting and new-life experience.
2.Be a professional who exhibits self-confidence and self-assurance in your potential to complete any task.
3.Agree with yourself in advance that you will have a good attitude toward the upcoming task.
4.Frequently ask, "Is what I am doing right now moving me toward my goals?"
5.Do it right the first time and you will not have to take time later to fix it.
6.Accept responsibility for your job successes and failures. Do not look for a scapegoat.
7.Do not view things you do as a "job." View all activities as a challenge.
8.Believe that you can be what you want to be.
9.Never criticize yourself as having a weakness. There is no such thing. You are only talking about a present undeveloped skill or part of yourself that if you so chose, you can change. You do not have any weakness, only untapped potential.
10.Be pleasant all the time-no matter what the situation.
11.Challenge yourself to do things differently than you have in the past. It provides new ideas and keeps you interested.
12.Talk to yourself. A self-talk using positive affirmation is something that is common among all great achievers. They convince themselves that they can accomplish their goals.
13.Create your own "motivation board" by putting up notes of things you need to do on a bulletin board or special wall space. It is an easily visible way to see what you need to work on. When an item is done, remove the note. Also keep your goals listed and pictured on your board.
14.Stay interested in what you are doing. Keep looking for what is interesting in your work. Change your perspective and look at it as someone outside your job would,
Establish personal incentives and rewards to help maintain your own high enthusiasm and performance level.
Saturday, July 18, 2009
DR.அப்துல்கலாமின் மாணவர்களுக்கான 10 உறுதிமொழிகள்


மாணவ-மாணவிகளுக்கான பத்து உறுதிமொழிகள்!
1.நான் எனது வாழ்க்கையில் நல்லதொரு இலட்சியத்தை மேற்கொள்வேன்.
2. நன்றாக உழைத்துப் படித்து, என வாழ்க்கையிலே மேற்கொண்ட இலட்சியத்தை அடைய முற்படுவேன்.
3. நான் எனது விடுமுறை நாட்களில் எழுதப் படிக்கத் தெரியாத ஐந்துபேருக்காவது எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுப்பேன்.
4. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்தபட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதை பாதுகாத்து வளர்த்து மரமாக்குவேன்.
5.மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகித் துயருறும்ஐந்துபேரையாவது அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த நான் முயல்வேன்.
6. துயருறும் ஐந்துபேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களது துயரைத் துடைப்பேன்.
7. நான் ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ எந்தவித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்துகொள்வேன்.
8. நான் வாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொண்டு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.
9. நான் என் தாய் மற்றும் தாய்நாடு இரண்டையும் நேசித்து, பெண்குலத்திற்கு உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் அளிப்பேன்.
10. நான், நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாக சுடர்விடச் செய்வேன்.
Thursday, July 16, 2009
வெற்றி ரகசியம் - 1


நிச்சயமாக வெற்றி என்பது மகத்தானது தான்! ஆனால் வாழ்க்கையில் நீங்கள் எதையாவது சாதிக்க விரும்பினால், தோல்வியடைவது எப்படி என்ற ரகசியத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள. தோல்வியை சந்திக்காத மனிதன் உலகில் யாருமில்லை. மோசமான தோல்வியிலிருந்து உயிர்த்தெழுத்து வெற்றியைப்பறிக்கும் மனிதனே வாழ்கையில் நிஜமான சாதனையாளன்.
No matter where youlives, live cheerfullu
Showing good spirits.
You have to create cheerfulness for your Self.
Thursday, May 7, 2009
செய்வோம் அல்லது செத்து மடிவோம்...
பின் வருபவை எனது நண்பர் அனுப்பியது
செய்வோம் அல்லது செத்து மடிவோம் !
இன்று சொல்வோம்! நாளை செய்வோம்!!
இருப்பதை பகிர்வோம்! ஏழ்மையை ஒழிப்போம்!!
நமக்காக அல்ல! நாளைய தலைமுறைக்காக!!
1. தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும். புகைப்படம் மற்றும் கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். பெற்றோர் விபரம், சொத்து விபரம், வருமானம் மற்றும் அனைத்து விபரங்களும் இதில் இருக்க வேண்டும். அனைத்து சேவைக்கும் இதுவே போதுமானது.
2. இரண்டு குழந்தைக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசாங்க உதவிகள், வேலை வாய்ப்புகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். குடும்ப கட்டுப்பாடு செய்பவர்களுக்கு ரூபாய் 10,000/- கொடுக்கலாம். ரூபாய் 5,000/- கையிலும் ரூபாய் 5,000/- குழந்தை பெயரில் வங்கியில் சேமிக்கலாம்.
3. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவருக்கு மட்டும் அரசாங்க வேலை கொடுக்க வேண்டும். மற்றவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யலாம் அல்லது சுய தொழில் செய்யலாம்.
4. அனைத்து மாவட்டத்திலும் 10,000 பேர் ஒரே இடத்தில் வசிக்க கூடிய நகரம் அமைக்க வேண்டும். இந்த இடத்தில் தமிழ்நாட்டில் பிறந்த அனைத்து தமிழனுக்கும் வீடு கட்ட 10 முதல் 25 சென்ட் நிலம் இலவசமாக வழங்க வேண்டும். 10 சென்ட் நிலம் இல்லாமல் ஒரு தமிழ் குழந்தை பிறக்கவும் கூடாது, 10 சென்ட் நிலம் இல்லாமல் ஒரு தமிழன் இறக்கவும் கூடாது. இந்த நிலம் விற்கவோ, வாங்கவோ அல்லது பிரிக்கவோ அனுமதிக்கக் கூடாது. அடிப்படை வசதிகள் அனைத்தும் இங்கு செய்து கொடுக்க வேண்டும். கண்ட கண்ட இடத்தில் வீடுகள் இருந்தால், இன்னும் 1000 வருடம் ஆனாலும் அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்க முடியாது. ஏன் அந்த ஆண்டவனாலும் முடியாது. இதனால் விளை நிலங்கள் வீடாவதை தவிர்க்கலாம். வயல் மற்றும் விளை நிலங்கள் வீடுகள் ஆவதை தவிர்க்க வேண்டும்.
5. ஒரு குடும்பத்திற்கு 25 ஏக்கர் நிலத்திற்கு மேல் நிலம் வைக்க அனுமதிக்க கூடாது. பிரதான சாலை ஓரத்தில் ஒரு ஏக்கருக்கு மேல், ஒரு தனி நபர் வைக்க அனுமதிக்கக் கூடாது. அரசு போடும் சாலை அனைத்தும் அனைவருக்கும் பயன்பட வேண்டும். அதிகமான நிலத்தை அரசு கையகப்படுத்தி நிலம் இல்லாதவருக்கு வழங்க வேண்டும். இலவசமாக அரசு கொடுக்கும் நிலத்தை விற்கவோ வாங்கவோ அனுமதிக்கக் கூடாது. நிலத்தை குடியிருப்பு நிலம், விளை நிலம், வயல் நிலம் மற்றும் தொழிற்ச்சாலை நிலம் என பிரிக்க வேண்டும். நிலங்கள் அதன் பிரிவிற்கேற்ப பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
6. ஆறு, ஏரி மற்றும் குளங்கள் அனைத்தும் நன்றாக ஆழப்படுத்தி சுவர் எழுப்பி பராமரிக்க வேண்டும். பாசன வசதி பெறும் இடங்களில் வீடுகள் மற்றும் ஆலைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.
7. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பேருந்து நிலையம், ஒரு சந்தை, ஒரு காவல் நிலையம், ஒரு விளையாட்டு அரங்கம் ஒரு படிப்பகம் அனைத்தும் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதியிலும் இது ஒரே விதமாக ஒரே வடிவத்தில் அமைய வேண்டும்.
8. நதிகள் அனைத்தும் தேசிய மயமாக்க வேண்டும். மத்திய அரசு நதி நீரை பங்கிட்டு அணைகளை பராமரிக்க வேண்டும்.
9. நமது இயற்கை வளம் அனைத்தும் பயன்ப்படுத்த வேண்டும். இளநீர், கள் மற்றும் அனைத்து பானங்களும் பதப்படுத்தி குப்பியில் அடைத்து விற்க வேண்டும்.
10. இரண்டு தடவைக்கு மேல் முதல்வர் ஆகவோ, மந்திரி ஆகவோ, பாராளுமன்ற உறுப்பினர் ஆகவோ, சட்டமன்ற உறுப்பினர் ஆகவோ இருக்க கூடாது. 75 வயதுக்கு மேல் அரசு பதவிகள் வகிக்க கூடாது. கடைசி வரை கட்சிப்பணி செய்யலாம்.
11. பொது சேவை செய்யும் அரசியல்வாதிகள், அரசு ரேசனில் கொடுக்கும் உணவை உண்ண வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க வேண்டும். அவர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும். இதனால் அரசு நடத்தும் நிறுவனங்களின் தரம் உயரும். அப்படி செய்யாத அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும்.
12. அனைத்து பேருந்து நிலையத்திலும் கழிவறை சுத்தமாக பேண வேண்டும். பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் இலவசமாக கொடுக்க வேண்டும். தொண்டு நிறுவனம் அல்லது பெரிய கம்பெனி மூலம் இதை நிர்வாகப் படுத்தி, இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கம்பெனி விளம்பரங்கள் வைத்து செலவு ஈடு கட்டலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலைய கழிவறைகளும் மிகவும் மோசமாக உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் மாதம் ஒரு முறை கண்காணிப்பது நல்லது. அனைத்து பேருந்து மற்றும் பேருந்து நிலையத்தை இரவு நேரத்தில் சுத்தப்படுத்த வேண்டும்.
13. பேருந்துகளில் ரீசார்ஜ் கார்ட் மூலம் பயணசீட்டு கொடுக்கும் நடைமுறையை அமல்ப்படுத்த வேண்டும். இதனால் சில்லறை பிரச்சினைய்யை தவிர்க்கலாம். பேருந்து, பேருந்து நிலையம் மற்றும் பயணசீட்டுகளில் விளம்பரம் செய்து பேருந்து கட்டணத்தை குறைக்கலாம்.
14. வியாபாரம் பண்ணுவது அரசின் கடமை அல்ல. நல்ல நிர்வாகம் பண்ணுவது தான் அரசின் கடமை. முடிந்தவரை தனியாரிடம் விட்டு விட்டு நல்ல நிர்வாகம் பண்ண வேண்டும்.
15. தனியார் பேருந்து மற்றும் வாடகை வண்டிகள் அனைத்தும் 10 வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
16. சுகாதாரம் இல்லாத ஹோட்டல், உணவு விடுதிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களை கைது செய்து அபராதம் விதிக்க வேண்டும்.
17. ஒரு மாவட்டத்திற்கு ஒரு கண்காட்சி அரங்கம் அமைக்க வேண்டும். அனைத்து பொருட்களின் கண்காட்சியும் வருடம் முழுவதும் இங்கு நடத்தலாம்.
18. விவசாயிகளுக்கு விவசாய நிலத்திற்கேற்ப வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். கல்வி கற்க வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.
19. எதையும் இலவசமாக கொடுக்கக் கூடாது. குறைந்த விலை அல்லது மானியம் வழங்க வேண்டும். நல்ல தரமான பொருட்கள் பெட்டியில் அடைத்து ரேசன் கடைகளில் விற்க்கலாம்.
20. ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு படிப்பகம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒரே வடிவத்தில் இது அமைய வேண்டும். இதனால் பராமரிப்பு செலவு குறையும்.
21. அனைத்து சாலைகளுக்கும் 5 வருட உத்ரவாதம் மற்றும் 5 வருட பராமரிப்பு, சாலை போடும் நிறுவனமே செய்ய வேண்டும்.
22. சாலைகள் அனைத்தும் தனியார் நிறுவன பங்களிப்போடு செய்ய வேண்டும். ஒரு கிலோ மீட்டர் சாலை செய்ய ஆகும் செலவை தரும் தனியார் நிறுவனங்களுக்கு, அந்த நிறுவனத்தின் விளம்பர பலகையை அந்த சாலையில் வைக்க அனுமதிக்க வேண்டும். சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவுகள் அனைத்தும் நீக்க வேண்டும். அபாயகரமான வளைவுகளால் அப்பாவி உயிர்கள் பறிபோகக் கூடாது. சாலைகள் அனைத்தும் சர்வதேச தரத்துக்கு மாற்ற வேண்டும்.
23. அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் 5 வருட உத்ரவாதம் அல்லது 5 வருட இலவச பராமரிப்பு, பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமே வழங்க வேண்டும். 5 வருடம் உத்ரவாதம் இல்லாத பொருட்கள் அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும்.
24. முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்க்கு மறு வாழ்வு மையம் அமைக்க வேண்டும். பிச்சை எடுப்பதை தடை செய்ய வேண்டும். பிச்சையில்லாத, வறுமையில்லாத தமிழ்நாடு அமைய வேண்டும்.
25. தமிழ்நாட்டின் தலைநகரத்தை திருச்சி அல்லது மதுரைக்கு மாற்ற வேண்டும்.
தமிழனால் முடியாதது எதுவுமில்லை! தமிழனுக்கு முடியாதது எதுவுமில்லை!!
தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க!! தமிழர் நலம் வாழ்க!!! தமிழ்நாடு வாழ்க!!!!
முடியாததை முடிப்பவன் தான் தமிழன்!!!
நமக்காக அல்ல! நாளைய தலைமுறைக்காக!!
எல்லோரும் சமம்! எல்லாமும் சமம்!! எல்லோர்க்கும் சமம்!!!
இருப்பதை கொடுப்போம்! இல்லாமையை விரட்டுவோம்!!
இன்று சொல்வோம்! நாளை செய்வோம்!!
இதை செய்தால் இன்றே இந்தியா வல்லரசு ஆகும் !!!!
இன்னும் வரும்.........
இதை படிக்கும் நண்பர்களே, மேற்க்கூறிய கருத்துக்களில் 50%, உங்களுக்கு உடன்பாடு இருந்தால், உங்கள் நண்பருக்கு அனுப்பவும். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நாளைய உலகை படைப்போம்.
தேவை
பணியின் பெயர் : முதல்வர்
பணியின் தகுதி: மேற்க்குறிப்பிட்ட பணியை செய்ய நேர்மையான, சுயநலமில்லாத, சமத்துவ எண்ணம் கொண்ட, தூய்மையான, துணிவுள்ள, நல்ல நிர்வாகம் தெரிந்த, தமிழ் நாட்டின் மேல், தமிழ்நாட்டு மக்கள் மேல் அன்புள்ள தமிழன் தேவை.
வயது : 25 வயதுக்கு மேல் 50 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்
சம்பளம்: 6 கோடி மக்களின் அன்பு, 600 பேரின் கோபம், 60 சுயநல அரசியல்வாதிகளின் எதிர்ப்பு.
பணி விபரம்: 5 சட்டம் இயற்ற வேண்டும். சில நிர்வாக சீர்த்திருத்தம் செய்ய வேண்டும்.
பணியின் கால அளவு : 3 மாதம் அல்லது கூடுதல்
முக்கியமான தேவை அல்லது சம்மதம் : 3 மாதம் முதல்வர் பதவி விட்டு தரக்கூடியக் கட்சி.
Labels:
நாளைய உலகம்
Monday, April 13, 2009
Subscribe to:
Posts (Atom)



